30 Jun 2016

வேலைவாய்ப்பை மையப்படுத்திய தொழில்ப் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் துறையினை மையப்படுத்தி கணினித் துறையின் வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு விவேகானந்த தொழில் நுட்பவியல் கல்லூரி (Vivekananda College of Technology) மேற்கொண்ட தொழில்சந்தை
ஆய்வின்படி வேலைவாய்ப்பு அதிகமுள்ள கணினி வரையில் வினைஞருக்கான (Computer Graphic Designer) தேவை அதிகமாக உள்ளமையால் அதற்கான பயிற்சி நெறியினை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கு வதற்கு முன்வந்துள்ளது. 

பயிற்சியின் பின் அவர்களுக்கான தொழிலினை வழங்குவதற்கு தனியார் துறைதொழில் வளங்குனர்கள் ஒன்றிணைந்த மட்டக்களப்பு கணினி, காட்சிபடுத்தல் தொழில்நுட்பவியல் வினைஞர் அமைப்பு (Computer & Visual Technology Technician Association of Batticaloa-CVTTAB)  முன்வந்துள்ளது.

இந்நிலையில், பயிற்சி வழங்கும் தொழில்ப் பயிற்சி நிறுவனம், தொழில் வழங்குனர்கள் அமைப்பு என்பவற்றை ஒருங்கிணைத்து அவர்களுக்கான நிதிமற்றும் அவர்களின் இயலுமையை மேம்படுத்தும் நோக்கில் கனடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனம் (World University Service of Canada-WUSC) கணினித்துறை தொழில் வழங்குனர்கள், மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடும் நிகழ்வானது மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதியில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில் நுட்பவியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை மாலை (29) நடைபெற்றது.

இந் நிகழ்விற்குகனேடிய உலகப் பல்கலைக்கழக இலங்கைக்கான பணிப்பாளர் எஸ்தர் எம் மக்கிற்டோன், மற்றும் அதன் கிழக்குபிராந்திய அணித்தலைவர் மற்றும் கனேடியஉலகப் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்புகணினி, காட்சிபடுத்தல் தொழில்நுட்பவியல் வினைஞர் அமைப்பு தலைவர், உறுப்பினர்கள், சமூகநலன்புரி அமைப்பின் தலைவர், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர், உட்பட உத்தியோகத்தர்கள், பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொழில் வளங்குனர்களின் தேவைக்கு ஏற்றவிதத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் தொழிலாளர்களுக்கான பயிற்சியினை விவேகானந்த தொழில் நுட்பவியல் கல்லூரி வழங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவிருப்பதாக கனேடிய உலகப் பல்கலைக்கழக இலங்கைக்கான பணிப்பாளர் இதன்போது தெரிவித்ததோடு, தொழில் வழங்குனர்களின் இயலுமையை வளர்ப்பதோடு, அவ் அமைப்பினை தேசியரீதியில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்வதாக தெரிவித்தார். இது அப்பிரதேசத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றிருக்கும், இளைஞர், யுவதிகளுக்குக் கிடைத்துள்ள அரியசந்தர்ப்பமாகுமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.










SHARE

Author: verified_user

1 Comments: