மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் புதிதாக பாலங்கள் அமைக்க வேண்டிய தேவை உள்ளன. இந்நிலையில் அதில் முதற்கட்டமாக 4 புதிய பாலங்கள் நிருமாணிக்கப் படவுள்ளன அந்த வiயில் பங்குடாவெளி – நரிப்புல் தோட்டத்திற்குரிய பாலம், கிண்ணையடி – பிரம்படித்தீவுப் பாலம், சந்திவெளி – திகிலிவட்டைப்பாலம், மற்றும் றாணமடு – மாலையர்கட்டு ஆகிய இடங்களிலே இப்புதிய பாலங்கள் நிருமாணிக்கப் படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நிருமாணிக்கப் படவுள்ள பாலங்கள் தொடர்பில் ஞயிற்றுக் கிழமை (19) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த 4 பாலங்களையும் நிருமாணிப்பதற்கு 2820 மில்லியன் (282 கோடி ரூபா) நிதி செலவாகும் என நெடுஞ்சாலைகள் அமைச்சின் பொறியியலாளர்களால் தற்காலிக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றுள், றாணமடு பாலத்திற்கு 120 மில்லியன் ரூபாவும், சந்திவெளிப்பாலத்திற்கு 1200 மில்லியன் ரூபாவும், கிண்ணையடிப் பாலத்திற்கு 850 மில்லியனும், பங்குடாவெளிப் பாலத்திற்கு 650 மில்லியனும் செலவாகும் நெடுஞ்சாலைகள், அமைச்சின் பொறியியலாளர்களால் தற்காலிக செலவு மதிப்பீடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நிருமாணிக்கப்படவுள்ள மேற்படி 4 பாலங்களையும், மேலும் 2 தொழிற்சாலைகளும், நிருமாணிக்கப்படும், எனவும். இவற்றுக்கான நிதியினை வழங்குவதாகவும், கடந்த வரவு செலவுத்திட்ட உரையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தர்.
எனவே இவ்வபிவிருத்தி திட்டங்களை இவ்வருடத்திற்குள் அமுல்ப்படுத்த சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், உடன் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் கோரிக்கையும் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment