30 May 2016

கல்வி கற்க வந்த மாணவர்கள் தங்கள் கல்வியோடு மாத்திரம் கவனத்தைச் செலுத்த வேண்டும்

SHARE
கல்வி கற்க வந்த மாணவர்கள் தங்கள் கல்வியோடு மாத்திரம் கவனத்தைச் செலுத்த வேண்டுமே தவிர,அடாவடித்தனங்களில் ஈடுபடுவது எவராலும் விரும்பத்தக்கதல்ல என முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.  

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பிலும்,தற்போது நடைபெற்று வருகின்ற பிரச்சனைகள் தொடர்பிலும் ஞாயிற்றுக் கிழமை (29) விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது...


தனது முகப்புத்தகத்தில் மே 18 பற்றிய படத்தினை பதிவேற்றிய கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றேன்.


இதுமாதிரியான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற கிழக்குப் பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்படுவது இது முதல் தடவையல்ல .இதுமாதிரியான சம்பவங்கள் இதற்க்கு முன்பும் நடைபெற்றிருக்கின்றன .இவைகள் மிகவும் கண்டிக்கத்தக்க விடயங்கள்.


இந்தத் தாக்குதல்கள் தொடருமாக இருந்தால் தமிழ் மாணவர்களும் இந்த அடாவடித்தனக்களை கையிலெடுத்தால் அது ஒரு இன முரண்பாடுகளை ஏற்படுத்தி பாரதூரமான விளைவுகளை கொண்டுவரும். எனவே இதற்க்கு பல்கலைக்கழக நிர்வாகமும்,பொலிசாரும் தகுந்த நடவடிக்கை எடுத்து அடாவடித்தனம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.அதனூடாக இதுமாதிரியான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் உறுதிப்படுத்த வேண்டும்.


கல்வி கற்க வந்த மாணவர்கள் தங்களின் கல்வியில் மாத்திரம் கவனத்தை செலுத்த வேண்டுமே தவிர,அடாவடித்தனங்களில் ஈடுபடுவதுடன்,தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைத்து தங்களின் எதிர்காலத்தையும் வீணாக்கி, பல்கலைக் கழகத்தின் கௌரவத்திற்கும் இழுக்கு ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அதுவே எல்லோரும்கும், எல்லாவற்றிக்கும் சிறந்தது என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: