19 May 2016

தற்போதைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்ககளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காவிடின், எதிர் காலத்தில் சுதந்திரமான தீர்வு கிடைக்காது – நடா

SHARE
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் எமது தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காவிடின், எதிர் காலத்தில் சுதந்திரமான தீர்வு கிடைக்காது.  எமது தமிழ் மக்களின் விடிவுக்காக தற்போதைய இலங்கை அரசாங்கம் நல்ல வேலைத் திட்டங்களை மேற்கொண்டாலும், பெரும்பான்மை
இனத்தைச் சேர்ந்த குரோத எண்ணங்கள் கொண்ட அரசியல் வாதிகள், சமாதானத்தை விரும்பும் பெரும்பான்மை இனத்தவர்களின் மனங்களை மாற்றுகின்ற செயற்பாடுகளில் தற்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளர்.

வாழைச்சேனை பேத்தாழை வீரையடி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்காலில் உயிர் நீர்த்த தமிழ் உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி புதன் கிழமை (17) மாலை விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

முள்ளிவாய்க்காலில் எமது அப்பாவித் தமிழ் மக்கள் மிகக் குரோதமான முறையில் அழிக்கப்பட்ட நாளை இன்றயதினம் நாம் நினைவு கூருகின்றோம். இவ்வேளையில் எமது இனத்திற்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவு கூருகின்றோம். விதைக்கப்பட்ட எமது உறவுகளின் தியாகங்கள் நிஜமாவதற்கு எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தற்போதைய நல்லாட்சி என்கின்ற அரசினூடாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய பேச்சுவாத்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான தருணத்தில் கடந்த காலத்தில் எமது மக்களைக் கொன்றொழித்த அரசியல் தலைவருன் இணைந்து மேலும் சில புல்லுருவிகள்,  எமது நிரந்தர அரசியல் தீர்வைக்கு குழப்பும் நடவடிக்கைகயில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டிலே அனைவருக்கும் சமமான உரிமை கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகத்தான் எமது தலைமைகள் தற்போதைய அரசுடன் பல பேச்சுவார்த்தைக்களை நடாத்தி வருகின்றார்கள். 

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எமது தமிழ் மக்ககளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காவிடின், எதிர் காலத்தில் சுதந்திரமான தீர்வு கிடைக்காது.  எமது தமிழ் மக்களின் விடிவுக்காக தற்போதைய இலங்கை அரசாங்கம் நல்ல வேலைத் திட்டங்கைள மேற்கொண்டாலும், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குரோத எண்ணங்கள் கொண்ட அரசியல் வாதிகள், சமாதானத்தை விரும்பும் பெரும்பான்மை இனத்தவர்களின் மனங்களை மாற்றுகின்ற செயற்பாடுகளில் தற்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இதனை நிறுத்த வேண்டும்.

இலங்கையில் ஒரு சமாதான இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். 2016 இல் எமக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என எமது தலைவர் தெரிவித்துள்ளார். இத்தீர்வு கிடைக்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் பழைய இலங்கைக்குத் திரும்பும். எனவே தற்போதைய அரசாங்கம் எத்தயை தியாகங்களைச் செய்தாவது  இவ்வருடத்திற்குள் எமது தமிழ் மக்களுக்குரிய நிரந்தரத் தீர்வைப் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: