12 May 2016

கிழக்கில் பரவலாக மழை

SHARE
நீண்ட வறட்சிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை செவ்வாய்க்கிழமை தொடக்கம் பரவலாக மிதமாகப் பெய்ய ஆரம்பித்துள்ளது.
ஆனாலும், மழை மானியில் கணக்கிடக் கூடியளவுக்கு மழை பதியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல இடங்களில் அதிக வெப்பத்துடன் கூடிய வியர்வை குறைந்து குளிரான காலநிலை நிலவுகிறது.

இதேவேளை தற்போதைய மழை வீழ்ச்சி இன்று பிற்பகலில் நாடு பூராகவும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ள வானிலை அவதான நிலையம் இடிமின்னல் பற்றி அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதகாலமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலவிய அதிக வெப்ப நிலை காரணமாக பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடப்படுவது தொடர்பாக மத்திய  அரசுக்கும் மாகாண சபைகளுக்குமிடையில் சர்ச்சை எழுந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிக வெப்ப நிலை காரணமாக கிழக்கு    மற்றும் வட மத்திய மாகாண பாடசாலைகள் கடந்த வாரம் மட்டும் நண்பகல் 12 மணியுடன் மூடப்படுகின்றன.

இருப்பினும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள  தேசிய பாடசாலைகள் வழமை போல்  நடைபெற்றன.

மாகாண  சபைகளினால் எடுக்கப்பட்டுள்ள  தீர்மானத்தை உடனடியாக கைவிடுமாறு மத்திய சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகள் கேட்டிருந்தது. இதனால் மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கிடையில் அதிகார இழுபறியும் ஏற்பட்டிருந்தது.

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற வெப்ப நிலை  மே மாதம் 3வது வாரம்  வரை நீடிக்கும் என எதிர்பார்கப்படுவதாக  வளி மண்டலவியல் தினைக்களம் கூறுகின்றது.

வழமையாக இக் காலப்பகுதியில்  அதிகரித்த வெப்ப நிலை காணப்பட்டாலும் இம் முறை சில பிரதேசங்களில் சற்று அதிகமான அகோர வெயில் எறிப்பதாகவும் வளி மண்டலவியல் தினைக்களம்  தெரிவிக்கின்றது. 

SHARE

Author: verified_user

0 Comments: