அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகராலய நேரடி உதவித் திட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் 64 இலட்ச ரூபாய் செலவில் மட்டக்களப்பு மாவடிவேம்பிலுள்ள உளநல அபிவிருத்தி நிலையத்தில் பல்தேவை தொழில்வழி கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை 12.05.2016 காலை இடம்பெற்றதாகஉளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நவீன வசதிகளுடன் இந்தக் கட்டிடத் தொகுதியை நிருமாணிப்பதன் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 50 இற்கு மேற்பட்டோர் தொழிற்பயிற்சி பெறுவதற்குத் தோதாக இந்த தொழிற் பயிற்சி நிலையம் அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகர் பிரையீ ஹட்செஸன் (Bryee Hutchesson- Australian High Commissioner Srilanka) அவுஸ்திரேலிய உயர் ஸ்தானீகராலய கவுன்ஸிலர் சார்லற் பிளன்டல் (Charlotte Blundell-Counsellor, Australian High Commission) இரண்டாவது செயலாளர் எட்வின் சின்கிளயர் (Edwin Sinclair- Second Secretary) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரெட்ணராஜா, உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார், வைத்தியர்கள்,தாதியர்கள், பயனாளிகள், பயிலுநர்கள், சமூக நல சேவையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment