6 Apr 2016

நமது தேசிய தலைமை அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாம் பாதுகாக்க வேண்டும் அமைச்சர் அமீர் அலி.

SHARE
நமது தேசிய தலைமை அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாம் பாதுகாக்க வேண்டும்அவருக்கெதிரான பேரினவாத சக்திகள் இன்னும் சதிவலை பின்னிக்கொண்டுதான் இருக்கின்றனநமது சமூகத்தின் விடிவுக்காகவும்,எழுச்சிக்காகவும்,உரிமைக்காவும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உரத்துப் பேசுகின்ற ஒருவராக அவர் இருப்பது சில இனவாதம் பேசுகின்றவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது.


என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.


வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும்அகில இலங்கை மக்கள் காங்கிஸின் பிரதித்தலைவரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெமீ லின் தலைமையில் சனிக்கிழமை (02)  இரவு சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் உட்கட்டமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….. பெருந்தலைவர் அஸ்ரப்பின் பின்னர் நமது உம்மத்தின்  விடயங்களில் எந்தவித சமரசமும் இல்லாமல் தைரியமாக போராடுகின்ற பெருந்தலைவர் அவர்களின் அதே குணம் கொண்டவர் நமது தேசிய தலைவர் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.

இந்த நேர்மையான தலைமையின் கரங்களைப்பலப்படுத்தி அவரின் பாதுகாப்புக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிய வேண்டும்.


இந்தப்பிரதேசம் எமது கட்சியை நம்பி கடந்த பாராளமன்ற நாடாளுமன்றத் தேர்தலில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்து எம்மை கெளரவப்படுத்தியதுஅந்த நம்பிக்கையை  வீணாகும் வகையிலோ அல்லது அந்த நம்பிக்கைகள் சிதறடிக்கப்படுகின்ற வகையிலோ நாம் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டோம்எல்லாவற்றுக்கும் ஒரு கால அவகாசக் தேவை அதன் பின்னரே எமது பணிகளை தொடர முடியும்நீங்கள் எங்கள் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வையுங்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை.


இந்தப்பிரதேசத்திற்கான தலைமைத்துவத்தை சில ஆயிரம் வாக்குகளால் நாம் இழந்தோம்அந்தப்பிரதிநிதித்துவம் நமக்கு கிடைத்திருக்குமானால் உங்கள் குறைநிறைகளை அந்த தலைமைத்துவத்திடம் சொல்லி பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றிருக்க முடியும்உங்களது எல்லாப் பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க முடியும் என்று எம்மால் வாக்களிக்க முடியாதுஅவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கவும் கூடாது


ஆனால் மக்களின் பிரச்சினையில் கணிசமான அளவை தீர்க்க முடியும் என நான் நம்புகின்றேன் நமது கட்சியையும் தலைமையையும் நாம் பலப்படுத்த வேண்டும்இந்த மத்திய குழுவானது எதிர்காலத்தில் இந்தப்பிரதேத்தின் பிரச்சினைகள் இனங்கண்டு அதனை தீர்க்கின்ற வகையில் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என கூறினார்.



இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிதிருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப்வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சுபைதீன்ஜுனைதீன் மான்குட்டி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: