உலக நண்பர்கள் அமைப்பின் இசைவோடு கதிரவன் கலைக்கழகத்தின் அனுசரணையில் வாகரை வாணனின் “மட்டக்களப்பு காவியம்” எனும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (02) கதிரவன்
கலைக் கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராஜாவின் தலைமையில் நாவற்குடா இந்து கலாசாரமண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நூல் வெளியீட்டு விழாவின் முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்ணம், விரிவுரையாளர் கலாநிதி ரவிச்சந்திரா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கவிதைகள், ஆய்வுக்கட்டுரைகள், நாடகங்கள் என பல்வேறு இலக்கியங்களை வெளியிட்டுள்ள வாகரை வாணனின் 37 ஆவது பதிப்பாக இந்நூல் படைக்கப்பட்டிருந்தது.
இந்நூலானது மட்டக்களப்பின் பாரம்பரியங்களை பறைசாற்றும் விதத்திலும், தமிழர் கலை கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துரைக்கும் வகையிலும் வடிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment