10 Apr 2016

கைகள் கட்டப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணம் இருக்கின்றது – முதலமைச்சர்

SHARE
பாதிக்கப் பட்டுப்போயுள்ள மாகாணமாக எமது கிழக்கு மாகாணம் இருக்கின்ற போதிலும், வளங்கள், திறமைகள், உணர்வுகள், மாகாணத்திற்காக உழைக்கக் கூடிய அத்தனை சக்திகள் எமக்கு, இருக்கின்ற
போதிலும், தேவைகள் அதிகம் இருக்கின்ற போதிலும் எமது கைகள் கட்டப்பட்ட நிலையிலேதான் எமது கிழக்கு மாகாண சபை இருந்து கொண்டிருக்கின்றது என்பதை மனவேதனையுடன் கூறிக் கொள்கின்றேன்.

என கிழக்கு மாகாண மதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை சனிக்கிழமை (09) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

கிழக்கு மாகாணத்திலிருந்து அதிகாரங்கள் மத்திய அரசினால், சிறிது சிறிதாக பறிக்கப்பட்டு ஒரு திணைக்களத்தின் செய்பாடுகள் போன்றவற்றிற்குத்தான் மாற்றப் பட்டிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளை வெறுமனே சும்மா பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைமைகளாக நாம் இருக்கப் போவதுமில்லை.

இந்நாட்டின் பிரதமருக்கும், ஜனாதிபதிககும். எமது கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது. பாதிக்கப் பட்டுப் போயிருக்கின்ற வடகிழக்கிலேயுள்ள மாகாண சபைகளின் அதிரங்களை  பகிர்ந்தளிப்பதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் பிரமதருக்கும், ஜனாதிபதிக்கும், பிரத்தியேக நேரம் தேவையில்லை.

அதிகாரப் பகிரிவு இல்லாத காலங்களில் எவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதைப் போன்று தற்போதும் இவ்வாறான நிலமை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. மத்திய மாகாணத்திலே வீதி அபிவிருத்தி அதிகார சபையால் ஏறத்தாள 595 கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யப் படுகின்றது. 15665 மில்லியன் ரூபாய் நிதி அதற்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசினால் பாரிய நிதி மூலம் அபிவிருத்தி செய்யப்படுகின்ற வேளையில் மாகாண சபைகளுக்கு வெறும் 300 மில்லியனுக்குக் குறைவான நிதி ஒதுக் கீடுதான் வீதி அபிவிருத்திகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்ன. இந்த நிடையத்தை  மத்திய அரசு புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.  

அதிகாரப் பகிர்வு எனக் கூறிக்கொள்ளும் அத்திய அரசு நிதி ஒதுக்கிடுகளில் பாகுபாடு காட்டுகின்றது. மத்திய அரசில் இருக்கின்ற அமைச்சரிகளின் உள்ளங்களில் மாற்றம் வரவேண்டும் எமக்கு வேண்டியளவு நிதி ஒதுக்கிடுகள் கிடைக்கப் பெறுமாயின் இம்மாகாணத்திலே உள்ள அனைத்து மூலை முடுக்குகளிலுமுள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் இவ்வருடத்திற்குள் தீர்வு காண்போம். 

திறமை வாய்ந்த அதிகாரிகளையும். நிருவாதகத் திறங்களையுடைய மாகாணமாக எமது மாகாணம் மிளிர்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் நிதி ஓதுக்கீடுகள் முடங்கிக் கிடப்பதனால் ஒட்டு மொத்த நாடே பாதிக்கப் பட்டுப் போயிருக்கின்றது. 15.2 வீதம் நில வளங்களைக் கொண்ட மாகாணசபை 70 வீதமான மக்கள் விவசாயத் தொழிலை மேற்கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட மாகாணத்திற்கு நிதி ஒதுக் கீடுகள் மிகக் குறைவான நிலையில்தான் உள்ளது. 
மத்திய அரசிலே உள்ள விவசாய அமைச்சருக்கு கிழக்கு மாகாணத்தைப் பற்றி நன்கு தெரியாது. எனவே இவ்விடையத்திற்கு ஜனாதிபதியும், பிரதமரும் ஒருமித்து செயற்பட்டு கிழக்கு மாகாணத்தை முன்நேற்ற முன்வர வேண்டும். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: