10 Apr 2016

நீங்கள் கல்வியைத் தேடுங்கள் உங்களை அனைத்தும் தேடும்.

SHARE
எந்தச் சமூகம் கல்வியைப் பற்றிச் சிந்திக்கின்றதோ அதுதான் சரித்திரத்தின் முதலெழுத்துக்களாகப் பதியப்பட்டவை, பல நாடுகள் எப்போதும் கல்வியைப் பற்றி சிந்தித்ததன் காரணமாகத்தான், அந்நாடுகள் தற்போது
முன்னேறிக் கொண்டிருக்கின்றன. என மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் சி.சிவபாதம் தெரிவித்தார்.

மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்திய 14 மணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு வியாழக் கிழமை (07) மேற்படி பாடசாலையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு மாணவர்களைக் கௌரவித்து விட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

தன்னுடைய பலம், பொருள் தனம், தானியம் அனைத்தையும் எந்த நாடுகள் இழந்து நிற்கின்றதோ அவை கல்வி பற்றிச் சிந்திக்காதவையாகும், இதுதான் சரித்திமாகும். எனவே எந்தச் சமூகமும் தன் கலை கலாசார விழுமியங்களையும்,  தன்னுடைய கௌரவத்தையும் பேண விரும்புகின்றதோ அந்த அந்த சமூகம் கல்வியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இவைகளை கல்வியினூடாக எடுத்துச் செல்ல வேண்டும். இவைகளை பொருளாதாரத்தினூடாக நாம் அனைத்தையும், எட்டி விடுவோம் என நினைத்தால் அவை தோல்வியடையும்.

களுமுந்தன்வெளிக் கிராமம் எப்போதாவது கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறும் எனின் அது தன்னுடை தலையை நெருப்புக் கொள்ளி கொண்டு சொறிந்ததற்குச் சமனாகும். எனவே பெற்றோர்கள் இவ்விடையத்தில் சிந்திக்க வேண்டும், நாம் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வரலாற்றை, நாம் பட்ட கஸ்ட்டங்கள், அனைத்துக்கும், படிப்படியாக முற்றுப் புள்ளி வைத்து, சேவை செய்கின்றவர்களாக, மற்றவர்களை நெறிப்படுத்தும் சமூகமாக மாற வேண்டும். எனவே எமது பரம்பரை கல்வியில் சிறந்து விளங்க வைப்போம் என்று, பெற்Nhர்களாகிய நீங்களே உங்கள் தலை மீது சத்தியம் செய்து கொள்ளுங்கள் 

பெற்றோர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு நினைத்தால் இக்கிராமம் அவ்வாறு நினைக்கும், பின்னர் இக்கிராமத்திற்கு மாலைகள், பதவிகள், பட்டங்கள், பணம் என்பன தேடி வரும், எனவே நீங்கள் கல்வியைத் தேடுங்கள், உங்களை அனைத்தும் தேடும். 

கல்விப் பொதுத்தர சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நாம் தற்போது வழங்கியுள்ள கொளரவத்தைக் கண்டு இவ்வருடம் இப்பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களின் கற்றலுக்கு உந்து சக்கதியளிக்கும். 

நல்ல சிந்தனைகள் மாழுவதில்லை, எவன் எதை எண்ணுகின்றானோ அவன் அதுவே ஆகிவிடுவான். எனவே நல்லதை நினைப்பவர்கள் உயர்ந்து செல்வார்கள், தீயதை நினைப்பவர்கள் அவர்கள் தீர்ந்த கொண்டே செல்வார்கள். எனவே எதிர்கால சந்ததியினராகிய நமது பிள்ளைகளை நல்ல சிந்தனையாளர்களாகவும், முற்போக்காளர்களாகவும், வெள்ளை உள்ளத்துடன் வளர்த்தெடுக்க வேண்டும். எனவே குழந்தைகளின் எண்ணைங்களை கமலமாக்குங்கள். அது எதிர்காலத்தில் பூத்துக்குலுங்கும். என அவர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: