6 Apr 2016

தமிழ் வாழ வேண்டுமானால் தமிழன் வாழக்கூடிய அதிகாரத்தோடு வாழவேண்டும் - அமைச்சர் துரை

SHARE
நிதான அரசியல் என்றும் தீவிரவாத  அரசியல் என்றும் அரசியலை 2 விதமாக நோக்கலாம். அரசு சரியானதொரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் போது நிதானமாகச் செயற்படும்.  இந்த நாட்டிலே தமிழர்களைப் பெறுத் தவரையில்
தேசிய அரசியல் அல்ல பிராந்திய அரசியல்தான் முக்கியமானதாகும்.

தமிழ் வாழ வேண்டுமானால், தமிழன் வாழக்கூடிய அதிகாரத்தோடு வாழ வேண்டும். எனவே தமிழர்களின் குரலை நாடாளுமன்றில் ஒலிக்கச் செய்து பிராந்திய அரசியல் அதிகாரத்தைப் பெற்றெடுக்கக் கூடிய வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பால் மக்கள் ஒன்றுதிரள வேண்டும்.

என கிழக்கு மகாண விவசாய கூட்டறவு அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன கடனுதவுக்  கூட்டுறவுச் சங்கத்தின் 29 வது நிறைவு விழாவும், வருடாந்த பழிசழிப்பு நிகழ்வும் சனிக்கிழமை (02) நடைபெற்றது. 

மேற்படி சங்கத்தின் தலைவர் தலைவர் க.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்துவிட்டு கூவச் சொல்வது போலதான் எமக்கு கிழக்கு மாகாண சபையில் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.  இந்த வித்தில்தான் கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரம் சென்று கொண்டிருக்கின்து.

இந்த நசாடு ஒரே நாடாக ஒற்றை ஆட்சியின் கீழ், இருக்க வேண்டும் என மிகவும் அக்கறையோடு இருந்தவர்கள் சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம், போன்ற எமது தமிழ் தலைவர்கள்தான். 

தலைவர் பிரபாகரனோ, தந்தை செல்வாவே தமிழீழம் என்ற வார்த்தையை உச்சரிக்க முன்னர் முதன் முதலில், தமிழீழம் என்ற வார்த்தையை உச்சரித்தவர் சேர்.பொன்.அருணாசலம்தான் மிகவும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து முன்வைத்திருந்தார்.

பின்னர் தமிழ் மக்கள் பல்வேறு விதமான பேரப்பேச்சுக்களுக்கெல்லாம் உட்பட்டிருந்தனர் பின்னர் யதார்த்த பூர்வமாக இந்த நாட்டை ஒரு நாடாக வைத்துக் கொண்டு, அரசில் அதிகாரங்களைப் பங்கு போட்டுக் கொண்டு தோழமையோடும், சகோதரத்தவத்தோடும், வாழக்கூடிய ஒரு அரசியல் முன்மொழிவினை 1949 டிசம்மபர் 18 ஆம் திகதி, மருதானை எழுதுவினைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அங்குரார்கப்பணக் கூட்டத்திலே தந்தை செல்வா முன்மொழிந்தார்.

இந்நிலையில் அரசியல்  அதிகாரம் ஆக்கப்படுகின்ற இந்த நேரத்திலே அவை பங்கிடப்பட வேண்டும், இதற்காக வேண்டிப் போராடியவர்கள் தொடர்பிலும் மக்களின், இழப்புக்கள் தொடர்பிலும், கணக்கிலே எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்புக்கழும் வழங்கப்பட வேண்டும். என்ற எமது தலைவர் இரா.சம்மந்தனின் செய்தியை வெள்ளிக்கிழமை (01) ஏறாவூரில் நடைபெற்ற நிழக்வுக்கு வந்திருந்த ஜனாதிபதியின் கவனத்திற்குக் நான் கொண்டு சென்றேன். இவற்றை ஜனாதிபதி மிகவும் தெழிவாக கிரகித்துக் கொண்டுள்ளார். என்பதையும் எனக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் எடுத்துரைத்தார்.

இந்த நாட்டிலே அரசியல் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என வெள்ளிக்கிழமை (01)  ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு, தெற்கு போன்ற பல இடங்களிலும் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அபிவிருத்திகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப் படவில்லை. என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாம் திறந்த மனதோடு உண்மையான அரசியலைப் பேச வந்தால் அவற்றினை மக்கள் விளங்கினாலும், இவ்வாறான தேச பக்கதியான இனப்பறாளர்களை முடக்கி ஒடுக்குவதற்கு தயாராகும் அரசியல்வாதிகள்தான் இந்நாட்டிலே அதிகம் உள்ளார்கள்.

எமக்குள்ளே ஒற்றுமை வேண்டும், தென்னிலங்கையிலே உள்ள இரண்டு மிகப்பிரதான கட்சிகளும், ஒற்றுமைப்பட வேண்டும், இவற்றுக்கு ஏற்ற வித்திலே சர்வதேச அரசியல் சாதகமாக இருக்க வேண்டும். என எமது தலைவர்கள் மிக நீண்ட காலமாகவிருத்து எடுத்தியம்பி வருகின்றார்கள். மேபற்படி 3 நிலமைகளும்,  தற்போது உருவாகியிருக்கின்றன. மேற்படி 3 நிலமைகளையும் வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டிய மிகப் பிரதான பொதுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குச் சுமத்தப்டிபட்டிருக்கின்றது.

எமது தலைவர் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருக்கின்றார் அவர் காட்டுகின்ற வழியை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள். பல்வேறு விதங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டிருக்கின்hர்கள். மிகவும் நிதானமாக, மிகவும், பக்குவதாகச் செயற்பட்டு 2016 ஆம் ஆண்டு ஒரு சிறந்த அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

பிரதமரும், ஜனாதிபதியும், நினைத்துவிட்டால் ஒரு சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என சிலர் நினைக் கின்றார்கள்.

நிதான அரசியல் என்றும் தீவிரவாத  அரசியல் என்றும் அரசியலை 2 விதமாக நோக்கலாம். அரசு சரியானதொரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் போது நிதானமாகச் அதில் செயற்படடும். இந்த நாட்டிலே தமிழர்களைப் பெறுத்தவரையில் தேசிய அரசியல் அல்ல பிராந்திய அரசியல்தான் முக்கியமானதாகும்.

தமிழ் வாழ வேண்டுமானால், தமிழன் வாழக்கூடிய அதிகாரத்தோடு வாழவேண்டும். எனவே திழர்களின் குரலை நாடாளுமன்றில் ஒலிக்கச்செய்து பிராந்திய அரசியல் அதிகாரத்தைப் பெற்றெடுக்கக் கூடிய வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பால் மக்கள் ஒன்றுதிரள வேண்டும். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: