6 Apr 2016

எதிர்காலத்தில் வரக்கூடிய தாக்கங்கள் அனைத்திற்கும் அகிம்சை ரீதியாக முகங்கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம் - நடராசா

SHARE
எதிர்காலத்தில் வரக்கூடிய தாக்கங்கள் அனைத்திற்கும் அகிம்சை ரீதியாக முகங்கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம். எமது தலைவர்கள் துணிந்து நின்று எமக்கான தீர்வினை சர்வதேசத்தில்
முன்னைத்துள்ளனர். இதன் அடிப்படையில் அனைவரும் சமமாக வாழக்கூடிய சமஸ்ட்டி அடிப்படையிலான தீர்வாக அமைய வேண்டும் என்பதனையே எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன கடனுதவுக்  கூட்டுறவுச் சங்கத்தின் 29 வது நிறைவு விழாவும், வருடாந்த பழிசழிப்பு நிகழ்வும் சனிக்கிழமை (02) நடைபெற்றது. 
கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….


தற்போது இந்த நாட்டில் மக்களுக்குத் தெரியும் இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் ஓர் இடத்தில் குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும், அதனை வைத்திருந்தவர்கள் புலிகள் எனவும் புலிப் பயங்கரவாதம் உருவாகியிருப்பதாகவும் அமைச்சர்களாக இருந்தவர்களும், இந்த நாட்டின் தலைவர்களாக இருந்தவர்களும் இதனை பூதாரமாக்கிக் கொண்டு இருப்பதனை மக்கள் அறிந்திருப்பார்கள். உண்மையில் இவ்வாறான குண்டுப் பொதிகள் இராணுவத்தினரால் இடையிடையே கண்டு பிடிக்கப்படுவது வழமையாகும்,  இந்நிiலில்,  தமிழருக்கான தீர்வு ஒன்றினை வேண்டி நிற்கின்றவேளை பெரும்பான்மை மக்களின் மனதினை மாற்றுகின்ற நடவடிக்கையினை மேற் கொண்டு வருகின்றனர். 

எம்மால் நிராகரிக்ப்பட்டு எம்மீது சீற்றங் கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக்ச குழுவினர் எமது மக்களுக்கு எதிராக துவேசத்தினைப் பரப்புவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். அதுமட்டுமல் இப்படியான சம்பங்களை உருவாக்கி எமது பிரச்சினைகளை நன்கு உணர்ந்து எம்மோடு கைகோர்த்து இருக்கின்ற பெரும்பான்மை அரசியில் வாதிகளையும், பெரும்பான்மை மக்களையும் குழப்பி எமக்கான தீர்வினை தூரநகர்த்துகின்ற செயற்பாடாகவே நாங்கள் இதனைப்பார்க்கின்றோம். 

ஒன்றை மட்டும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் கடந்த காலங்களில் நாங்கள் பட்ட வேதனைகள் அனைத்தையும் நாங்கள் மறக்கவில்லை இருந்தும் இதற்கு அப்பால் எமது மக்களுக்கான  தீர்வு ஒன்றினையே  நாங்கள் தற்போது வேண்டி நிற்கின்றோம் இதற்காகவே எமது தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாங்கள் கடந்த காலங்களில் எதற்கும் அஞ்சாமலே நாங்கள் இருந்தோம். தற்போதும் நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதுமில்லை. எதிர்காலத்தில் வரக்கூடிய தாக்கங்கள் அனைத்திற்கும் அகிம்சை ரீதியாக முகங்கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம். எமது தலைவர்கள் துணிந்து நின்று எமக்கான தீர்வினை சர்வதேசத்தில் முன்னைத்துள்ளனர். இதன் அடிப்படையில் அனைவரும் சமமாக வாழக்கூடிய சமஸட்டி அடிப்படையிலான தீர்வாக அமைய வேண்டும் என்பதனையே எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர் இதனையே நாங்கள் அரசியல் சாசனத்தில் உணர்த்துவதற்கு காத்திருக்கின்றோம்.

கடந்த கால அசாதாரண சூழ் நிலையிலும் கூட குறுமன்வெளி சிக்கனக் கடனதவு கூட்டுறவுச் சங்கமானது இன்று வரை நிலைத்திருகின்றது என்றால் அவற்றை நாங்கள் பாராட்டாமல் இருக்க முடியாது எதனையும் நாங்கள் சிக்கனமாக பாவிக்க வேண்டும் இன்று மின்சாரம்,தண்ணீர் மாத்திரமின்றி பெறுகின்ற கடனையும் சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். இதே போன்றுதான் பங்ளாதேஸ் நாட்டிலே இவ்வாறான சிறுகடன் வழங்கும் நிறுவனத்தை உருவாக்கி அதில் நோபல் பரிசும் பெற்றுளனர், அந்த நாடும் இவ்வாறுதான் முன்னேறியது. என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: