மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வீதிகள் பலவற்றை கார்பெற் இட்டு அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்
நஸீர் அஹமட் புதன்கிழமை (06) தெரிவித்தார்.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திருத்தியமைக்கப்படாதிருந்த ஏறாவூர் புகையிரதக் கடவையிலிருந்து ஆரம்பித்து கடற்கரை வரை செல்லும் 3 கிலோமீற்றர் தூரமான புன்னைக்குடா வீதியைப் புனரமைப்பதற்கு 30 மில்லியன் ரூபாவும்,
காத்தான்குடி பிரதான நெடுஞ்சாலையிலிருந்து ஆரம்பித்து கடற்கரை வரை செல்லும் சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமான பீச் றோட் புனரமைப்புக்கு 10 மில்லியன் ரூபாவும்,
ஒரு கிலோமீற்றர் நீளமான ஏறாவூர் மீராகேணிப் பாடசாலை வீதியை வடிகானுடன் இணைந்ததாக புனரமைப்பதற்கு 17 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வீதிகளின் நிருமாண வேலைகளை உடனடியாகத் ஆரம்பிக்குமாறும், அதிகாரிகளுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment