6 Apr 2016

வெள்ளிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆரம்பம். இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் 25 ஆம் திகதி.

SHARE
அனைத்து அரசாங்க தமிழ், சிங்களப் பாடசாலைகளினதும் மற்றும் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளினதும் முதலாம் தவணைக்கான விடுமுறை வெள்ளிக் கிழமை (08.04.2016)
ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாவது தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் முடிவடைந்து இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: