தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் கருதி நலன்புரி அமைப்பு ஒன்று திங்கட் கிழமை (11) சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் டி.ஏ. பிரகாஷின் தலைமையில்
இடம் பெற்ற உத்தியோகத்தர்களின் ஒன்றுகூடல் நிகழ்வின்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் போது இந்த நலன்புரி அமைப்புக்கான புதியநிருவாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.
தலைவர்–பொறியியலாளர் வி.விஜயகாந்த், செயலாளர்–பொறியியல் உதவியாளர் இ.பிரதீபன், பொருளாளர்–சமூகவியலாளர் எம்.எஸ்.எம்.சறூக், ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு, ஏ.சந்திரகுமார், ஏம்.பீ.எம். றிபாயுதீன், எம்.ரீ.எம். நிஜாமுதீன்,
என். பிரேமினி, ஆர்.குணசேகரம் ஆகியோர் அமைப்பின் நிருவாக உறுப்பினர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
மேலும் இதன்போது இவ்வமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பனகுறித்த கலந்துரையாடலும் இதனைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்கானவழி வகைகள் குறித்தும ;தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment