இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பொலிசாரின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு சொந்தமான கோட்டக்கல்வி அலுவலகம் விடுவிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக கடமைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு திங்கட் கிழமை நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்டக்க கல்விப் பணிப்பாளர் எஸ். திரவியராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர், பிரதிக்க கல்விப்பணிப்பாளரகள்;, உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், சேவைக்கால பயிற்சி ஆலோசகர்கள், அதிபர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஆரம்ப காலந்தொட்டு கோட்டக்கல்வி அலுவலகமாக இயங்கிவந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல்காரணமாக பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. இதனை வலயக்கல்வி அலுவலகத்தின் தேவைக்காக பெற்றுக் கொள்ளும் பொருட்டு பலதரப்பட்ட முயற்சிகள் அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட போதும் அந் நடவடிக்கை கைகூடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து இக் கட்டிடமானது விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கோட்டக்கல்வி அலுவலகமானது பாடசாலை ஒன்றிலையே தற்காலிகமாக இயங்கி வந்தது திங்கட் கிழமையில் இருந்து அனைத்து வேலைகளும் குறித்த அலுவலகத்திலையே இடம் பெறும் என கோட்க்கல்வி அலுவலக வட்டாரம் இதன் போது தெரிவித்தது
0 Comments:
Post a Comment