13 Apr 2016

முச்சக்ரவண்டி குடைசாய்ந்து விபத்து சாரதி காயம்

SHARE
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் இருந்து பயணித்த முச்சக்கரவண்டி
குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் புதிய காத்தான்குடி, றிஸ்வி நகர் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டியின் சாரதி எம். றம்ழார் என்பவர் காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்ண்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: