மட்டக்களப்பு துறைநீலாவணை விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த இலவச மருத்துவக் கண்காட்சியும் மருத்துவ முகாமும் துறைநீலாவணை மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது தொற்று நோய்கள் தொற்றா நோய் தொடர்பான விளக்கங்கள் மற்றும் விளக்கப்படங்கள், நோய்கள் தொடர்பான பரிசோதனைகள் குறிப்பாக நீரிழிவுஇ புற்று நோய்கள் தொடர்பான ஆலோசனைகள் மருத்துவ பீட மாணவர்களினால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் துறைநீலாவணைக் கிராமத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் உட்பட கல்வி அதிகாரிகள்இ கிராம சேவகர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment