12 Apr 2016

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

SHARE

(டிலா)

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையில் க.பொ.த(சாஃத) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்
கொண்ட சாதனையாளர்களை கொளரவிக்கும் நிகழ்வு (08.04.2016) அதிபர் அருட்தந்தை பிரைனர் செல்லர் தலைமையில் நடைபெற்றது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த(சா/த) பரீட்சையில் சாதனை படைத்த 33 மாணவர்கள் இதன்போது நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இம்முறை கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையில் 9ஏ சித்தியை 8 மாணவர்களும், 8ஏ,பி சித்தியை 14 மணவர்களும், 7ஏ,பி சித்தியை 11 மாணவர்களும் பெற்றுக்கொண்டனர்.

பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் தமிழ்ப்பிரிவு கேட்டக்கல்வி அதிகாரி திருமதி. ராதிக்கா திரவியராஜா கலந்து கொண்டார். கேட்டக்கல்வி அதிகாரி இங்கு உரையாற்றும் போது,

பாடசாலைகளில் தரம்06 தெடக்கம் தரம்11 வரைக்கும் கல்வி கற்கும் மாணவர்களை அவர்கள் எந்த ஆண்டில் க.பொ.த(சாஃத) பரீட்சைக்கு தோற்றவுள்ளார்களோ அந்த ஆண்டை அடிப்படையாக வைத்து மாணவர்களை வகைப்படுத்த வேண்டும். பின்னர் குறித்த இலக்கை நோக்கி பயணிக்கவைக்க வேண்டும். அப்போது உயர்ந்த பெறுபேற்றை பெறமுடியும். இன்று எந்தவொரு இலக்கும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதால் உயர்ந்த பெறுபேற்ரை பெறமுடியாமல் உள்ளது. எதையும் எட்டிப் பிடிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். அதுவே வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்தப் பாடசாலையில் 2014ஆம் ஆண்டு 4 மாணவர்கள் மாத்திரமே 9ஏ சித்தியை பெற்றிருந்தார்கள் 2015இல் அது 8 மாணவர்களாக உயர்ந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். இந்த வளர்ச்சியை பெறுவதற்கு உதவிய எல்லோரையும் பாராட்டுகின்றேன். 2016இல் இதனை 20 மாணவர்களுக்கு மேலாக உயர்த்த வேண்டும். 
பெற்றோர்கள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு காட்டும் ஊக்கம் தரம் 06இல் காட்டுவதில்லை இதன் வீழ்ச்சியை சாதரனதரத்தில் காணுகின்றோம்.
இன்று கொரவிக்கப்பட்ட 09ஏ சித்தியை பெற்றுக் கொண்ட அனைவரும் பெண் மாணவிகள். இதனை ஆண் மாணவர்கள் சவாலாக எடுத்து 2016இல் இந்த சவாலை முறியடிக்க வேண்டும். ஆண் மாணவர்கள் முனைப்போடு கல்விகற்று சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும். மாணவர்கள் எப்போதும் தேடிக்கற்பவர்களாக இருக்க வேண்டும். கல்முனை வலயத்தில் இநதப் பாடசாலை உயர்ந்த நற்பெயரோடு உள்ளது. இதனை பாதுகாப்பது எல்லோரினதும் பொறுப்பாகும் எனக் கூறினார்.

நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் ரீசா பத்திரன, பிரதி அதிபர் திரு.சுபந்திரராஜா, உப அதிபர் திருமதி. செல்வராஜா, மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட் மணவர்களும் கலந்து கொண்டனர். 







SHARE

Author: verified_user

0 Comments: