6 Apr 2016

சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்

SHARE
(இ.சுதா) 

அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறுவர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை விருத்தி செய்தலும் சிறுவர்கள் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு பிரச்சினைக்கான  தீர்வுத் திட்டங்களை தயாரித்து நடைமுறைப் படுத்தல் மற்றும் பிரதேச மட்ட
வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு கடந்த திங்கட் கிழமை (04) மாவட்ட செயலக டி.எம். ஆரியரத்தின கேட்போர் கூடத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுகித பி.வணிகசூரிய தலைiயில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அம்பாi மாவட்டத்தினைப் பிரதி நிதித்துவப் படுத்தும் வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர்கள்இ பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள்இ சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட சிறுவர் பாது காப்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் உட்பட பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: