6 Apr 2016

மகிழூர் பயணியர் விளையாட்டுக் கழகம் சம்பியன்

SHARE
(இ.சுதா)

மட்டக்களப்பு முனைத்தீவு மேம்பவர் விளையாட்டக் கழகமும் அறிவொளி வாசகர் வட்டமும் இணைந்த நடாத்திய வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை  (04) முனைத்தீவு சக்தி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மேம்பவர் விளையாட்டுக்கழகத் தலைவர் எஸ்.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் பிரதம அதிதியாகவும் அதி விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா மற்றும் கௌரவ அதிதிகளாக முனைத்தீவு சக்தி வித்தியாலயத்தின் அதிபர் ஆ.புட்கரன் உட்பட கிராம பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தினை பிரதி நிதித்துவப் படுத்தும் வகையில் 32 கழகங்கள் போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு பட்டிருப்பு விளையாட்டுக் கழகமும்இ மகிழூர் பயணியர் விளையாட்டுக் கழகமும் தெரிவாகிய நிலையில் முதலில் துடுப்பாடுவதற்காக களமிறங்கிய பட்டிருப்பு வுளுடயமன் விளையாட்டுக் கழகம் எட்டு ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தினை நிறைவு செய்தது.

பதிலுக்கு துடுப்பாடிய மகிழூர் பயணியர் விளையாட்டுக் கழகம் 7.2 ஓவரில் 3 விக்கட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கினை அடைந்து பெறுமதியான வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்துக் கொண்டது.







SHARE

Author: verified_user

0 Comments: