சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐ.எல்.ஓ) அனுசரணையுடன், தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையினால் (நயிட்டா) தேசிய தொழிற் தகைமைச் சான்றிதழ் (என்.வி.கியூ-ஆர்.பி.எல்) வழங்கும் நிகழ்வு
19.04.2016 அன்று காலை மட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐ.எல்.ஓ) தேசிய திட்ட இணைப்பாளர் திரு சு. சிவப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்றது.
19.04.2016 அன்று காலை மட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐ.எல்.ஓ) தேசிய திட்ட இணைப்பாளர் திரு சு. சிவப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வி;ல் பிரதம அதிதயாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ். கிரிதரன் அவர்களும் கௌரவ அதிதியாக தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் (நயிட்டா) உப தலைவர் கலாநிதி. ஏ.யு.சீ. அத்துகோரல அவர்களும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஆர். நெடுஞ்செழியன், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் திரு. ரீ. தவராசா, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தேசிய திட்ட இணைப்பாளர் திரு. ஆர். சிவப்பிரகாசம் மற்றும் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் (நயிட்டா) நிதிப் பணிப்பாளர் ஜனாப். எம்.ஐ.எம்.அஸ்ஹர், வடகிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஜனாப். எம்.எச். சாஜஹான் மற்றும் மாவட்ட முகாமையாளர்; ஜனாப், எஸ்.ஏ.எம் சாலீம் மௌலானா அவர்களும், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒப்பந்தக்காரர் சங்கத்தலைவர் திரு. வி. ரஞ்சிதமூர்த்தி மற்றும் பி.டீ.சி.சி.ஐ.ஏ இன் தலைவர் திரு. எஸ். அகிலன் மற்றும் சான்றிதழுக்கான பிரதிநிதிகள் மற்றும் அழைப்பு அதிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்ட தொழிற் துறைசார் திறன்பெற்ற தொழில் வல்லுனர்களுக்காக தேசிய தொழில்;சார் தகைமைச் (என்.வி.கியு) சான்றிதழானது முன்கற்கையை அங்கிகரித்தல் முறைமையின் (ஆர்.பி.எல்) கீழ் மதிப்பீடுகளை மேற்கொண்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொழிற் துறைகளாக, கனரக வாகனப் பொறிவலர், மோட்டார் சைக்கிள் பொறிவலர், நீர்க்குழாய் பொருத்துனர், கொத்தனார், தச்சனார், மின்வினைஞர், குளிரூட்டல் மற்றும் வாயு சீராக்கல், தையற்காரர், கணணிப்பிரயோக உதவியாளர் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவினைஞர் முதலான தொழிற் துறைகளுக்கான தேசிய தொழில்;சார் தகைமைச் (என்.வி.கியு) சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் பிரதம மற்றும் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டவர்களுக்கும், மற்றும் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் (நயிட்டா) மட்டக்களப்பு மாவட்ட பதவியணியினர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டமானது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐ.எல்.ஓ) அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையினால் (நயிட்டா) கடந்த 2015 இல் தொழில்சார் வல்லுனர்களுக்காக நடாத்தப்பட்ட விழிப்புணர்வுப் பயிற்சிகளின் மூலம் சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 147 இனைக் கொண்டு தொழில்சார் மதிப்பீடுகளை நடாத்தியதன் மூலம் சித்தி பெற்ற 116 தொழில் வல்லுனர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் இதுபோன்ற செயற்றிட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையினால் (நயிட்டா) எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment