மட்.பட்.தும்பங்கேணி கண்ணகி மகாவித் தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழா திங்கட் கிழமை தும்பங்கேணி கண்ணகி மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு எழுவான் நியூஸ் இணையத்தளம் ஊடக அனுசரனை வழங்குகியிருந்தது.
வித்தியாலய அதிபர் வே.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மா.உலககேஸ்பரம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன் உட்பட கல்வி அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் என பலரும் காலந்து கொண்டனர்.
இதன்போது சர்வதேச ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுவர் விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன.
0 Comments:
Post a Comment