22 Mar 2016

ராகு கேது குற்றமுடையவர்களுக்கான விசேட கிரியை கோவில் போரதீவு நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற ஏற்பாடு

SHARE
ராகு கேது குற்றமுடையவர்களுக்கான விசேட கிரியை புதன் கிழமை கோவில் போரதீவு நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற ஏற்பாடு
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே எழில் நிறைந்த வயல் நிலங்களினால் சூழப்பெற்று வேண்டியவர்களுக்கு கோடி வரங்களை வாரி வழங்கும் வரலாற்றுப் புகழ்மிக்க கோவில் போரதீவு அருள்மிகு
ஆலையடி நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வானது ஆலயத் தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வரும் நிலையில்…

இவ்வருட உற்வ நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வு 23 ஆம் திகதி புதன் கிழமை நடைபெறவுள்ள சக்கரை அமுதுடன் நிறைவு பெறவுள்ளதுடன் ராகு கேது குற்றம் உடையோர், இவ்வாலயத்தில் நடைபெறவுள்ள கிரியைகளில் கலந்து தமது குறையினை போக்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

எனவே பக்த அடியார்களை ஆலய நிருவாகத்தினர் தயவு கூர்ந்து அழைக்கின்றனர். அத்துடன் ஆலய உற்சவம் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக வெளி உலகிற்கு கொண்டு வந்த ஊடக நண்பர்களுக்கு நன்றியினையும் பாராட்டினையும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: