(டிலா)
மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்துக்குட்பட்ட கட்டு முறிவுக்குளம் அ.த.க. பாடசாலையில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்கு றையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரி மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியை மறித்து இன்று திங்கட்கிழமை மாணவர்களும் பெற்றோர்களும்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிரவெளி பிரதான வீதியிலிருந்து 19 கிலோமீற்றர் தொலைவில் அதிகஷ்டப் பிரதேசத்திலுள்ள இந்தப் பாடசாலையில் க.பொ.த சாதாரணதரம் வரையான வகுப்புகளைக் கொண்டுள்ளன. தற்போது இங்கு 170 மாணவர்கள் கல்வி கற்பதுடன், ஆறு ஆசிரியர்கள் மாத்திரம் கல்வி கற்பிக்கின்றனர்;. இந்தப் பாடசாலையில் ஆங்கிலம், கணிதம், தமிழ், சமயம் உட்பட ஆறு பாடங்களுக்கும் ஆரம்பப்பிரிவுக்குமாக ஏழு ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
அதிகஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலை என்பதால், இந்தப் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருவதில் தயக்கம் காட்டுவதாக ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா ஆகியோரிடம் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கல்குடாக் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவிக்கையில், 'கட்டுமுறிவுக்குளம் அ.த.க.பாடசாலையின் தேவைகள் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் எனக்குத்; தெரியப்படுத்தவில்லை. இருப்பினும், இந்தப் பாடசாலைக்கு வாகரை, பனிச்சங்கேணி மற்றும் கதிரவெளி பிரதேசங்களைச்; சேர்ந்த மூன்று ஆசிரியர்களை நியமிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாகாணக் கல்வி அமைச்சால் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ள புதிய ஆசிரியர் நியமனத்தில் இந்தப் பாடசாலைக்கு கணிதம், ஆங்கிலப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்' என்றார் .

0 Comments:
Post a Comment