29 Mar 2016

பிரதேச சபைச் செயலாளரின் நிருவாகச் சீர்கேடுகளைக் கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச சபைச் செயலாளரின் நிருவாக மந்த நிலை மற்றும் நிருவாகச் சீர்கேடுகளைக் கண்டித்து பொதுமக்கள் திரண்டு செவ்வாய்க் கிழமை பிரதேச சபைக்கு முன்பாக
ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர்.

உள்ளுராட்சி நிருவாகத்தினால் செய்து முடிக்கப்பட வேண்டிய பல கருமங்களை குறித்த செயலாளர் செய்து முடிக்காது வினைத்திறனற்ற முறையில் காலங்கடத்துவதாகவும் அதனால் இந்தப் பிரதேச சபைப் பிரிவில் பல வகையான நிருவாகச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

குறித்த செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்து வினைத்திறனுள்ள ஒருவரை செயலாளராக நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கோரி நின்றனர்.
பொலிஸாரின் அனுமதி பெற்றே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக் காரர்களுடன் சமுகமளித்திருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  குறித்த பிரச்சினை குறித்து தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் மக்களின் கோரிக்கைக்கிணங்க வினைத்திறனுள்ள செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அங்கு சமுகமளித்திருந்த மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் நிருவாக ரீதியிலான நடைமுறைகளுக்கேற்ப பொதுமக்களின் கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இப்பிரதேச சபையின் செயலாளருக்கு இடமாற்றக் கடிதம் கிடைத்துள்ள போதும் நிருவாக ரீதியிலான நடைமுறைகளுக்கேற்ப அவர் மேன்முறையீடு செய்துள்ளார் அதன்பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார






SHARE

Author: verified_user

0 Comments: