மட்டக்களப்பு மாவட்டம், இலுப்படிச்சேனைகால் நடைவளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பால் குளிரூட்டும் நிலையம் திறப்புநிகழ்வு திங்கட் கிழமை (14) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவநாதன், கூட்டுறவுத் திணைக்கள ஆணையாளர் திவாகரசர்மா, உதவிஆணையாளர், கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU –SDDP) ; நிதியுதவி அளிக்கப்பட்டு UNDP அமைப்பினால் நிறுவப்பட்டு மேற்படிசங்கத்திற்கு வழங்கப்பட்டபால் குளிரூட்டும் நிலையம் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டதுடன், சிறந்தகால் நடைவளர்ப்பாளர்களுக்குப் பரிசில்கள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றமாணவர்களுக்கு ஊக்குவிப்புகள் எனவும் வழங்கிவைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment