9 Mar 2016

ஊடகவியலாளர்கள் ஒவ்வாருவரிடமும் அரசியலமைப்பின் பிரதி ஒவ்வொன்று இருக்க வேண்டும்.

SHARE
1931 ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்றது. அவ்வாக்குரிமை ஒரு நல்லாட்சியை உருக்குவதற்குத்தான் இருக்கின்றது. வாக்குரிமையைப் பரீட்சித்துப் பார்ப்பதுதான் வாக்களித்தல் எனும் தேர்தலாகும்.
அந்த தேர்தல் நீதியானதும், நேர்மையானதுமாக நடைபெறுகின்ற போதுதான் அங்கு ஜனநாயகம் உதிப்படுத்தப்படும்.

என இலங்கை பத்திரிகை இஸ்த்தாபனத்தின் முறைப்பாட்டுப் பொறுப்பதிகாரி அமீர் குசைன் தெரிவித்துள்ளார். பிராந்திய ஊடகவியலாயர்கள் தேர்தல் காலங்களில் எவ்வாறு அறிகையிடல்களை மேற்கொள்வது என்பது தொடர்பாக இலங்கை பத்திரிகை இஸ்த்தாபத்தினால் ஓழுங்கு செய்யப்பட்ட செயலமர்வு ஒன்று செவ்வாய் கிழமை (08) மட்டக்களப்பு பிறிச் பியூ விடுதியில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமழிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

அந்த வகையில் இவ்வாறான ஜனநாயகத்தை நெறிப்படுத்தக்கூடிய பொறுப்பு ஊடகவியலாளர்களாகும், இவ்வாறான ஊடகவியாலாளர்களை வளிப்படுத்தும், கடப்பாடு, இலங்கை பத்திரிகை இஸ்த்தாபனத்திற்கு உள்ளது. இதனடிப்படையில்தான் தற்போது தேர்தல் காலங்களில் ஊடகங்களில் அறிக்கையிடல் தொடர்பிலான செயலமர்வு நடைபெறுகின்றது. 

எம்மிடம் 5000 ஊடகவியலாளர்களின் தகவல் திரட்டு உள்ளது. அதில் 300 மேற்பட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களின் தகவல்கள் உள்ளன. 

எனவே தேர்தல் காலங்களில் ஊடகவியலார்கள் பக்கச்சார்பில்லாமல், கட்சி சார்பில்லாமல் நடந்து கொள்ளல் வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் பல தேர்தல் வன்முறைகள் நடைபெற்றன இவ்வாறான தேர்தல் வன்முறைகள் தொடர்பில் ஊடகவியலார்கள் கட்சிக்கோ, நபருக்கோ பாதகம் இல்லாமல் அறிக்கைகளை வெளியிட வேண்டும். 

அரசியல் கட்சிகளின் தலைவர்களின் விபரங்கள், வேட்பாளர்களின் பொயர்கள், கட்சிகளின் கொள்கைகள், அவர்களி தேர்தல் விஞ்ஞாபனம்,  தொடர்பான விளக்கங்களையெல்லாம் ஊடகவிஜயலாளர்கள், அறிந்திருக்க வேண்டும்.

ஊடகவியலாளர்கள் ஒவ்வாருவரிடமும் அரசியலமைப்பின் பிரதி ஒவ்வொன்று இருக்க வேண்டும். அவற்றிலுள்ள முக்கிய பிரிவுகளையும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அறிக்கையிடல்களிலும், அரசியலமைப்பிலுள்ள சரத்துக்களைத் தொடர்பு படுத்தி பிரசுக்க முடியும். எனவே ஊடகவியலாளர் களிடமிருந்து மக்கள் பல விடையங்களை எதிர் பார்க்கின்றார்கள், அவற்றுக்கு ஏற்றாற்போல் ஊடகவியலார்களும், தங்களைக் காலத்துக்குக் காலம் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்










SHARE

Author: verified_user

0 Comments: