சீட்டுப் பிடிப்பதாகவும் சுய தொழில் வாய்ப்புக்கு வங்கி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பணமும் பொருட்களும் பெற்றுத் தருவதாகவும் கூறி பெண்களை நம்ப வைத்து அவர்களிடமிருந்து
பல இலட்ச ரூபாய் பணத்தையும் தங்க நகை மற்றும் பெறுமதியான வேறு பல பொருட்களையும் ஏமாற்றிப் பெற்று வந்ததாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் மினுவாங்கொடையில் வைத்து கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த 46 வயதான மேற்படி பெண் செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் எம். கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது மார்ச் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தப் பெண்ணினால் புரியப்பட்டதாகக் கூறி பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள பண மோசடி பற்றிய முறைப்பாடுகளுக்கமைவாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபரான மேற்படி பெண் பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment