
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார சேவைப்பணிமனையின் ஏற்பாட்டில் தேசிய டெங்கொழிப்பு வாரத்தினை முன்னிட்டு டெங்கொழிப்பு வேலைத்திட்டம் நேற்று களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலையத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் பூர்வமாக அரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் பிரந்தியத்தில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாகரி சனத் நந்தலால் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டன்
ஆரம்பித்து வைத்து சுகாதார வைத்திய அதிகாரி உiராற்றுகையில் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் டெங்கு நோய்களை கூடியளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் இதற்காக 15 குழுக்கள் அமைக்கப்பட்டு கிரம ரீதியான சோதனை நடிவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் பொதுச்சுகாதார பரிசோதகர், பொலிசார், இராணுவத்தினர், தாதிய உத்தியோகத்தர்கள், போன்றோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எமது பிரந்தியத்தில் உள்ள வீடுகள் அரச நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் 4000 இடங்களில் சோதனை நடவடிக்கை முன்னெடு;க்கப்படும் இதன் ஊடாக பிறக்கும் சித்திரைப்புத்தாண்டு நோயற்ற நிம்மதியான ஆண்டாக மக்கள் கொண்டாட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் இதன் போது தெரிவித்தார்
0 Comments:
Post a Comment