29 Mar 2016

கல்லடி விவேகானந்த கடந்த வருடத்தைவிட முன்னணியில்

SHARE
(க.விஜி)

கல்லடி விவேகானந்த மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் வெளியாகியுள்ள .பொ..(சா/)பரீட்சை (2015) பெறுபேற்றில் கடந்த வருடத்தைவிட முன்னணி வகிக்கின்றார்கள் என வித்தியாலய முதல்வர்
திருமதி .திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்...2015 ம் ஆண்டிக்கான .பொ..(சா/) பரீட்சையில் இவ்வருடம் இரண்டு மாணவிகள் 9Aசித்திகளையும்,நான்கு மாணவிகள் 8A சித்திகளையும், இரண்டு மாணவிகள் 7Aசித்திகள் உட்பட இன்னும் பலமாணவிகள்சித்தியடைந்துள்ளனர்.

கடந்த வருடம் 59 வீதம் .பொ..(/)கற்பதற்கு தகுதி பெற்றனர்.ஆனால் இவ்வருடம் 64% மானோர் .பொ..(/)கற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.பாடரீதியாகவும்  மாணவிகள் சித்தியடைந்துள்ள வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்படி பரீட்சைக்கு தங்களின் அர்ப்பணிப்பான ஆசிரியசேவையை புரிந்த ஆசிரியர்களுக்கும்,பாடசாலையின் வளர்ச்சியில் கவனம் கொண்ட அதிபர்கருக்கும்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கும் பெற்றோர்கள் மணமார்ந்த நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.


SHARE

Author: verified_user

0 Comments: