2015 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி, மண்முனை வடக்கு மற்றும் மண்முனை பற்று
பிரதேசே செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான இடியப்ப தொழில் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள், மாகாண சபை மூலம் குறைவான தொகையே வாழ்வாதார உதவிகளுக்காக வழங்கப்படுகின்ற போதும் எம்மால் முடிந்தளவு வினைத்திறனாக வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் மக்களிடத்தில் கொண்டு சேர்கிறோம். இப்போது இந்த உதவிகளை பெரும் பயனாளிகளான நீங்கள் அடுத்த வருடம் 1000 ரூபாவையாவது தானம் செய்கின்ற ஒரு நிலையை அடைய வேண்டும்.
அதேபோல் உங்கள் பிள்ளைகளையும் தொடர்ச்சியாக கல்விகற்கச் செய்ய வேண்டும். அண்மையில் வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சை வெளியீடுகளுக்கு அமைவாக காத்தான்குடியை சேர்ந்த 30 மாணவர்கள் 9ஏ பெற்று சித்தி அடைந்திருந்தனர்.
இருந்த போதும் அதில் 75 வீதமான மாணவர்கள் பெண்கள். இதற்கான காரணம் ஆண் மாணவர்களில் பெரும்பாலானோர் தனியார் கல்வி நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்ற குறைந்த கால கற்கை நெறிகள் மூலம் ஈர்க்கப்பட்டமையாகும்.
குறைந்த கால கட்கைநெறிகள் என்ற பெயரில் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சீரழித்து விடக்குடாது. இறைவன் நாடினால் எதிர்வரும் காலங்களில் மாகாண சபை ஊடாக மேலும் முடிந்தளவு அதிகமான நிதியை வாழ்வாதார உதவிகளுக்காக ஒதுக்குவதற்கு ஆலோசித்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment