கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் பூர்விக காணிகளை வெள்ளிக்கிழமை (25) கடற்படையினர் விடுவிக்கும் நிகழ்வு சம்பூரில் இடம்பெற்றது .
இந் நிகழ்வின் போது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் , பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி , கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, கடற்படை தளபதி மற்றும் மாகாணசபை அமைச்சர்கள் , உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள் .
கிழக்கு மாகாண முதலமைச்சர் இங்கே உரையாற்றும் போது " மீண்டும் அவர்களது சொந்த காணிகளில் மீள் குடியேற்றப்பட்டதுடன் அவர்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புக்குரிய வேலைத்திட்டங்கள் வாழ்வாதார உதவிகள் போன்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் செய்து கொடுக்க சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக " தெரிவித்தார் .
0 Comments:
Post a Comment