21 Mar 2016

முஸ்லிம்களை கருவறுக்கத் துடிக்கும் ஷியாயிஸம் - மருதமுனையில் விழிப்பூட்டல் கருத்தரங்கு

SHARE
(டிலா)
இஸ்லாமிய வேடம் பூண்டு முஸ்லிம்களை கருவறுக்கத் துடிக்கும் ஷியாயிஸம் பற்றி கல்வியலாளர்களை தெளிவுபடுத்தும் விழிப்பூட்டல் கருத்தரங்கு மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையத்தின் ஏற்பாடில்(20.03.2016) மருதமுனை அல்-மஸ்ஜிதுல் அக்பர் ஜும்மா பள்ளிவாசலில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் ‘இலங்கையில் ஷியாக்களின் ஊடுருவலும் விஷவிதைப்பும்’ என்னும் தலைப்பில் கல்குடா இஸ்லாமிய பிரச்சார அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எ.எல்.பீர் முஹம்மத் (காஷ்மி) ஷியாயிஸம் - கொள்கைகளும் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்பில் மருதமுனை தாருல் ஹுதா அரபுக் கல்லூரின் அதிபர் அஷ்ஷெய்க்  கலாநிதி எம்.எல்.முபாறக் (மதனி), மற்றும் ‘முஸ்லிம் உம்மாவை சீரழிக்கும் ஷியாயிஸம் - ஓர் சர்வதேச பார்வை’ என்னும் தலைப்பில் அஷ்ஷெய்க்  ஆர்.நுவீஸ் (மக்கி)  ஆகியோரும் உரையாற்றினார்கள். இதில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பல துறைசார்ந்த கல்விமான்களும் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். 





SHARE

Author: verified_user

0 Comments: