இதுவரை வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்வி பொதுத்
தராதர உயர்தரம் கற்பதற்குத் தெரிவாகியுள்ளனர்.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்டபட்ட, வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 26 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும், 15 மாணவிகள் 8 பாடங்களில் ஏ சித்திகளையும், பெற்றுள்ளனர். இந்நிலையில் மட்.புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் ஒரு மாணவர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும் பெற்றுள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு மத்திய கல்லூரியில் 5 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும், 4 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்திகளையும், பெற்றுள்ளதோடு, மட்.13 ஆம் கிராம விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் ஒரு மாணவர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும், மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் ஒரு மாணவர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும், மற்றுமொரு மாணவர் 8 பாடங்களில் ஏ சித்திகளையும் பெற்றுள்ளதோடு, களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஒரு மாணவர் 6ஏ, 2பி 1 எஸ், சித்திகளையும், பெற்றுள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீறாபாலிகா மகா வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும், அல் கிறா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும், காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயத்தில் 3 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும், பெற்றுள்ளதாக அப்பாடசாலைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment