20 Mar 2016

கிழக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து தொடர்பில் காலந்துரையாடல்

SHARE
கிழக்கு மாகாண  வீதி பயணிகள் போக்குவரத்து  தொடர்பில் அதிகார சபை யின் தலைவர்  சமந்த பி அபேவிக்கிரம  ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்ர்ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையில் வியாழக்கிழமை (17) மாலை கிழக்கு மாகாண முதலமைச்சு அலுவலகத்தில் பாரிய காலந்துரையாடல் இடம் பெற்றது 
.இக்கலந்துரையாடளின் போது போக்குவரத்து துறையில் உள்ள இலஞ்ச ஊழல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் நேர முகாமை தத்துவத்தினை சரியானான முறையில் பின்பற்றாது செல்லல் வீதி ஒழுங்குகலை  பேணாமை போன்ற பல்வேறு துர் நடத்தைகளை ஒழிப்பது பாரிய கடமையாக உள்ளதாகவும் அதற்கு  முழு அதிகாரிகளும் உண்மைத்தனமையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் பணிப்புரை வழங்கினார் .

இவ்வாறான விடயங்களை சரிவர செய்யும் போது ஒரு முன்மாதிரி மிக்க சிறந்த கிழக்கு மாகாணமாக மாற்றியமைக்க முடியும் அவ்வாறு மாறும் போது இம்மாகாணத்தில் அதி சிறந்த பயணிகள் போக்குவரத்து சேவையினை மக்களுக்கு உறுதிப்படுத்தி கொடுக்க முடியும் என முதலமைச்சர் தெரிவித்தார் .

மேலும் இச் சேவையினை செய்வதில் உள்ள பிரைச்சினைகள் குறை நிறைகள் போன்றவற்றினை மூன்று மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டதுக்கு அமைவாக சகல பிரைச்சினைக்குமான ஒட்டு மொத்த தீர்வினை உடனடியாக பெற்று கொடுக்க முதலமைச்சர் துரித நடவடிக்கை யினை முன் எடுத்துள்ளார் .


இக்கலந்துரையாடலின் போது கிழக்குமாகாண சிரேஸ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு .எல் . .அசீஸ் ,வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர் நாயகம் எம் .எச் .உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரக்காப்பளர்கள் போன்ற பலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர் .  



SHARE

Author: verified_user

0 Comments: