மட்டக்ளப்பு மாவட்டம், ஏறாவூர் நகர சபை உத்தியோகத்தர்களுக்கான இடர் முன்னாயத்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு புதன்கிழமை இடம்பெற்றதாக ஏறாவூர் நகர
சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இடர் முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையில் கடமையாற்றும் சுமார் 35 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இயற்கை செயற்கை இடர்கள் ஏற்படு முன்னர் அதிகாரிகள் முன்னாயத்தங்களுடன் இடர்களுக்குத் தாக்குப் பிடித்து இழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளல் எவ்வாறு என்பதும் பாதிக்கப்படுவோருக்கு எவ்வாறு உதவலாம் என்பதும் இந்த விழிப்புணர்வூட்டலில் கருப்பொருளாக இடம்பெற்றிருந்ததாக நகர சபைச் செயலாளர் ஹமீம் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இடராயத்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எஸ். இன்பராஜன் உதவி இணைப்பாளர் ஏ.எம்.எம். கஸீர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment