துறைநீலாவணை கிராமத்தில் சிறு மீன் பிடியில் ஈடுபடுகின்ற பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அகில இலங்கை மீனவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலகு கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நாள் நிகழ்வு திங்கட் கிழமை (21) துறைநீலாவணை வடக்கு மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் செ.பூபாலரெத்தினம்
தலைமையில் துறைநீலாவணை மினிக் கோப் சிற்றி மண்டபத்தில் நடைபெற்றது.
100 பேருக்கு 10000 ரூபாய் கடன் வழங்குவதற்காக இதன்போது விண்ணப்ப படிவங்கள் பயனாளிகளிடடம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடகிழக்கு மீனவர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் எஸ்.தவபாலரெத்தினம் மற்றும் கிழக்கு மாகாண மீனவர் கூட்டுறவு சம்மேளனப் பணிப்பாளர் என்.திசாநாயக்க உட்பட மீனவர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் மீனவர்களுக்கு மீன்பிடி முறை, சந்தைப் படுத்தல் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டமை. குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment