22 Mar 2016

மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம் சாதனை

SHARE
(இ.சுதா)

அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடப்படையில் மட்.பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள அதி கஷ்ட பிரதேச பாடசாலையான மண்டூர் 13
ஆம் கிராமத்தின் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதில் சு.நிதுசிகா 9 பாடங்களிலும், ஏ தரச் சித்திகளையும், மோ.திலஷ்சன் 6 பாடங்களில் ஏ சித்திகளையும், 3 பாடங்களில், பி தரச் சித்திகளையும், ம.தர்சனா 6 பாடங்களில் ஏ தரச் சித்திகளையும், 2 பாடங்களில் பி சித்திகளையும், 1 எஸ் சித்தியினையும்,  அ.கவித்தா 5 பாடங்களில் ஏ தரச் சித்திகளையும்,  2 பாடங்களில் பி சித்திகளையும், 1 சி, 1எஸ் சித்தியினையும் பெற்றுள்ளதுடன் இப் பாடசாலையில் 37 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 28 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் சித்தி பாடசாலை ஒப்பீட்டளவில் 86 வீதமாகும். இப் பாடசாலை மாணவர்கள் பிரதான பாடங்களான கணிதம், தமிழ், ஆங்கிலம்,  விஞ்ஞானம், போன்ற பாடங்களில் அதிகளவான சித்தி பெற்று வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன் சித்திரம், சுகாதாரம், போன்ற பாடத்துறைகளில் நூறு வீதமான சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சகல வசதிகளுடனும் இயங்கிவரும் நகர்புற பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் இப் பாடசாலையின் வளர்ச்சியானது அண்மைக் காலமாக  விளையாட்டில் மாத்திரமல்லாது கல்வியிலும் மேலோங்கிக் காணப்படுகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.

இந்நிலையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய மாணவகளான  செல்வி ஞா.கிருஷ்ணிக்கா 9ஏ தரச்சித்தியினையும், அ.டென்சிகா 7ஏ 2பி தரச்சித்தினையும் பெற்று பாடசாலைக்கும் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை நல்ல முறையில் வழிப்படுத்திய பாடசாலைச் சமூகத்தினருக்கு பெற்றோர்கள், நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: