மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பொலிஸ் பொலிஸ் பிரிவு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் திங்கட்கிழமை பிற்பகல் நடந்த வீதி விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த
இருவர் படுகாமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது அதிவேகமாக வந்த ரிப்பர் வாகனம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
இதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த வாழைச்சேனையைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை (வயது 67) மற்றும் தனரூபன் (வயது 29) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களின் கைகள் மற்றும் கால்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. படுகாயமடைந்தவர்கள் முன்னதாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக நொருங்கி சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment