எதிர்வரும் 21.03.2016 அன்று காலை 9 மாகாணங்களுக்குமான முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலியில் நடைபெறவள்ளதாக
கிழக்குமாகாண முதலமைதச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இன்று புதன் கிழமை (09) ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டின்போது கிழக்கு மாகாணத்தில் தற்போது எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற நிருவாகக் கட்டமைப்புக்களிலுள்ள தடைகள், அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதிலுள்ள சவால்கள், மாகாண அமைச்சு மற்றும் திணைக்களங்களிலுள்ள குறைபாடுகள், அபிவிருத்தியில் ஏற்படும் பிரச்சனைகள், தொடர்பான கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிரச்சனைகள் தொடர்பிலும், ஒட்டுமொத்த தகவல்கள் திரட்டப்பட்டு இதன்போது ஜனாதிபதியிடம் மனு ஒன்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரால் இதன்போது கையளிக்கப் படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment