இந்த நல்லாட்சி என்பது அந்த சொல்லுக்கேற்ற விதத்தில் நயம்கொடுத்து மக்கள் உணுரும் வகையில் அதனைச் செயலாற்றுவதற்கு மத்திய அரசில் இருக்கும் பிரதிநிதிகளும் மாகாணத்தில் இருக்கும் பிரதிநிதிகளும் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கடந்த 07.02.2016 அன்று கிரான்குளம் தர்மபுரத்தில் இடம்பெற்ற இலங்கையில் முதலாவது உவர்நீர் மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கானது மிகப்பெரிய இருளில் இருந்து கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் முடிவின் பின்னர் கிழக்கு வெளிப்பது போன்று சிறியதொரு ஒளிக்கீற்று எங்கள் பிரதேசத்தில் வீசத் தொடங்கியது. அது நல்லாட்சி என்ற மகுடத்தோடு இன்று செயற்பட்டு வருகின்றது. கடந்த வருடத்தில் இருந்து தான் இந்த நாடு பன்மைத்துவ நாடு என்று இந்த பன்மைத்தவத்தினை அங்கீகரிக்கின்ற வகையில் ஒரு ஆட்சி இடம்பெற்றுள்ளது.
நடைமுறைகளினுடைய சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று கடந்த 04ம் திகதி காலிமுகத்திடலில் நடைபெற்ற தேசிய தின விழாவின் இறுதியில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை இந்த நாட்டின் மக்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தியாகப் பார்க்கப்பட வேண்டியதொன்றாகும்.
இந்த நல்லாட்சி சில சில நல்ல கருத்துக்களை எம்மத்தியில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற அதே வேளையில் இவற்றின் மையக் கருவாக இருக்கின்ற அதிகாரப் பங்கிடு என்கின்ற விடயம் இன்றைய அரசின் பாரிய சவாலாக அமைந்திருக்கின்றது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்குகின்ற அந்தப் பிரேரணையானது எமது தமிழ் மக்களின் சிறுபாண்மை மக்களின் தலைவிதியை எழுதுகின்ற ஒரு நிகழ்வாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நாட்டில் அதிகாரப் பங்கீடு வருவதற்கு இன்னும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருட காலம் எடுக்கலாம் ஆனால் அதனை இப்போது நடைமுறையில் கொண்டு வருவதற்குரிய சந்தர்ப்பம் மத்திய அமைச்சர்களுக்கு உண்டு. மத்திய அரசிற்குரிய விடயங்களை மாகாணங்களுக்குப் பரவலாக்குவதற்கு மத்திய அமைச்சர்கள் ஒத்தழைப்பார்கள் என்கின்ற நம்பிக்கை உண்டு.
கடந்த வருடம் வாதுவையில் இடம்பெற்ற விவசாய அமைச்சின் மாநாட்டில் வாத்து எனப்படும் பிரகடனத்தில் என்னுடைய முன்மொழிவின் அடிப்படையில் அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு விவசாய அமைச்சுகளின் செயற்பாடுகள் மாகாண விவசாய அமைச்சுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டள்ளது.
அனைத்திற்கும் மேலதிகமாக மாகாணங்களுக்கு இருந்த விவசாய அதிகாரங்களைச் சுருட்டி எடுத்த திவிநெகும சட்டத்தை அகற்றுவதற்கும் ஆதரவு கொடுப்போம் என்கின்ற வாஞ்சையோடான வாக்குறுதியையும் மத்திய விவசாய அமைச்சர் இதன் போது சொல்லி வைத்தார்.
மீன்பிடித் துறை என்பது 13வது திருதத்தில் மாகாணமும் மத்திய அரசும் ஒருமித்துக் கையாளுகின்ற ஒரு விடயமாக வரையப்பட்டிருக்கின்றது. மத்திய அரசினுடைய உத்தியோகஸ்தர்களும் மாகாண அரசின் உத்தியோகஸ்தர்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய அவசியமும் இருக்கின்றது. அவ்வாறு செயற்படுவதற்கு மத்திய அமைச்சர் நெறிவுறுத்தல்கள் வழங்குவார் என்கின்ற நம்பிக்கை எமக்குண்டு.
மின்பிடிச் சங்கங்களைப் பதிவு செய்வது, மின்படியாளர்களுக்கு மின்பிடி உரிமம் வழங்குவது, காடுகள் தொடர்பான நடவடிக்கைகளைக் கையாழ்வது போன்ற விடயங்களில் மத்திய அரசு சார்ந்த அதிகாரங்களை எங்களுடைய மாகாண உத்தியோகஸ்தர்களுடன் கலந்துரையாடி மிகச் சுமுகமாகச் செய்வதற்கான மத்திய அமைச்சரின் நெறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இன்று மிகப் பெரிய முதலீட்டோடு எமது மாகாணத்தில் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான திட்டத்துடன் எமது மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கும் அமைச்சரிடம் நான் கேட்டுக் கொள்வது மேற்படி திட்டங்களை நாம் வரவேற்பதுடன் அதற்கு பூரணமான ஒத்தழைப்பினை வழங்குவேம் என்று சொல்லுகின்ற அதே நேரத்தில் எமது பிரதேசத்தின் இயற்கைத் தண்மையை எந்த விதத்திலும் சிதறடித்து விடாத முறையில் இந்த செயற்பாடுகள் அமைய வேண்டும் அவ்வாறுதான் அமையும் என மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்கள் எவ்வகையிலும் அச்சம் கொள்ளாத வகையில் அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி செயற்படுத்தப்பட வேண்டும் என்பதனை நான் இதன்போது மத்திய அமைச்சர் அவர்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.
உள்நாட்டு நீர்நிலைகள் என்கின்ற ரீதியில் கடலில் 12 அல்லது 14 கிலோமீட்டர் தூரம் வரையிலான பிரதேசமும் இந்த உள்நாட்டு நீர் நிலைகள் என்ற வரையறைக்குள் வருகின்றதென்பதையும் மத்திய அமைசசர் அவசர்களுக்கு நினைவூட்டி அந்த விடயங்களைக் கையாள்வதற்கு மாகாணசபைக்கு ஏற்ற எத்தனங்களைக் கையாள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
சொல்லப்படுகின்ற இந்த நல்லாட்சி என்பது அந்த சொல்லுக்கேற்ற விதத்தில் நயம்கொடுத்து மக்கள் உணுரும் வகையில் அதனைச் செயலாற்றுவதற்கு மத்திய அரசில் இருக்கும் பிரதிநிதிகளும் மாகாணத்தில் இருக்கும் பிரதிநிதிகளும் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் அந்தக் கடமையைச் சிறப்புறச் செய்வதற்கு நாங்களும் கைகோர்ப்போம்.
எமது முக்கிய பணியாகிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் சிறுபாண்மை மக்களின் அபிலாசைகளை உள்வாங்கிக் கொண்டு அதனைத் தென்னக மக்களுக்கு தெளிவுபடுத்தி தமிழர்கள் முஸ்லீம்கள் இந்த நாட்டில் அந்நியர்கள் அல்ல நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்றால் சாதாரண வார்த்தையில் சொல்லப் போனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக சமைத்து உண்ணக் கூடிய அளவுக்கு சுதந்திரத்தை வழங்கும் ஒரு அரசியலமைப்பை ஆக்குவதற்கான மனநிலையினை இந்த நாடு முழுவதிலும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment