கிழக்கு மாகணத்தில் நீண்ட நாட்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வந்த தொண்டர் ஆசிரியர்கள் செவ்வாய் கிழமை (23)கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்தனர் .
இதனை கருத்திற் கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவ்விடத்திற்கு சென்று அவர்களது குறையினை கேட்டதுடன் அவா்களுக்கான தீா்வினை பெற்றுக் கொடுக்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளதாகவும் இதன் முயற்சி தான் பதவி ஏற்ற காலம் தொட்டு இன்று வரை தொடா்ந்து கொண்டிருப்பதாகவும் இவ் முன்னெடுப்பு மூலம் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளதாகவும் இவா்களுக்கான சரியான தீா்வினை பெற்றுக் கொடுத்து இவா்களின் பிரச்சினைக்கு முழுமையான நிவாரணத்தினை வழங்க சகல முன்னெடுப்புக்களையும் செய்துள்ளதாக முதலமைச்சா் தெரிவித்தாா்.
0 Comments:
Post a Comment