கடந்த 9 ஆம் திகதி பிரேரிக்கப் பட்டிருக்கின்ற புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குதல் என்கின்ற பிரேரணையானது சிறுபான்மை என்கின்ற தமிழ் மக்களாகிய எங்களுக்கு எங்களது தலைவிதியினை எழுதுகின்ற நிகழ்வாக நாங்கள் எதிபார்த்துக் கொண்டிருக்கின்றோம்.தேசிய நல்லிணக்கம் தொடர்பான மிக முன்னோடி கருத்துக்களை கொண்டிருந்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்கள் தெரிவித்தார்.
கடல்வாழ் செட்டை மீன் குஞ்சுகள் இனப் பெருக் நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு கிரான்குளத்தில் ஞாயிற்றுக் கிழமை (07) நடைபெற்றது இந் நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர, மீள் குடியேற்ற பிரதியமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டினர் இந் நிகழ்வில் அதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
1994 தொடக்கம் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது அமைச்சர மஹிந்த அமரவீரவுடன் கடமை புரிந்த நாட்களை நான் நினைத்து பார்க்கின்றேன். அக்காலகட்டத்தில் சந்திரிக்கா குமாரதுங்காவின் தலைமையில் அந்த அரசு அமைந்திருந்தது. தேசிய நல்லிணக்கம் தொடர்பான மிக முன்னோடி கருத்துக்களை கொண்டிருந்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க. அவருடைய காலத்திலேய தான் நீலன்பிரிஸ் தீர்வுத்திட்டம் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் அவர்களால் ஒஸ்லோவிலே மாவீரர் தினத்திலே உருவாக்கப்பட்ட வரவேற்கத்தக்க தீர்வுத்திட்டமாக கொள்ளப்படது இந்த நினைவுகளை இவ்விடத்தில் நினைவு படுத்துவது குறிப்பிடத் தக்கதாகும்
எங்களுடைய வடகிழக்கு மிகப் பெரிய இருளில் இருந்து கடந்த வருடம் ஜனவரி, 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கிழக்கு வெளித்தாற்போல் சிறிய ஒளிக்கீற்று எமது பிரதேசத்தில் வீசத்தொடங்கியது. இந்த ஆட்சி நல்லாட்சி என்ற மகுடத்துடன் செயற்பட்டு வருகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் தேசிய தினத்தினை பிரகடணப்படுத்தி உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாடு பன்மைத்துவ நாடு என்றும் பன்மைத்துவத்தினை வென்றெடுத்துக் கொண்டு அனைத்து மக்களின் அங்கிகாரத்துடன் ஒரு சமதான சூழலை உருவாக்குவது தன்னுடைய இலட்சியம் என்றும் பிரகடணப் படுத்தினார்.
இந்த நடைமுறையில் உள்ள சில, சில நிகழ்வுகள் நடைபெற்று அதனுடைய முக்கிய மைல் கல்லாக கடந்த 4 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம் பெற்ற தேசிய தின விழாவில் இந்த நாட்டு மக்களுக்கு எல்லாம் வெளியிடப்பட்ட நற் செய்தியாக தமிழிலே தேசிய கீதம் பாடப்பட்டது. இவையெல்லாம் நல்ல, நல்ல செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற அதே வேளையிலே இவற்றினுடைய அதிகாரப் பங்கீடு என்கின்ற விடயம் அரசினுடைய மிக முக்கியமான சவாலாக அமைந்திருக்கின்றது என்பதனை இவ்வமைச்சர் உணர்வார் என்று நான் நினைக்கின்றேன்.
கடந்த 9 ஆம் திகதி பிரேரிக்கப் பட்டிருக்கின்ற புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குதல் என்கின்ற பிரேரணையானது சிறுபான்மை என்கின்ற தமிழ் மக்களாகிய எங்களுக்கு எங்களது தலைவிதியினை எழுதுகின்ற நிகழ்வாக நாங்கள் எதிபார்த்துக் கொண்டிரு;கின்றோம்.
இந்த வகையில் ஜனாதிபதி தென்னகத்திலே எதிர் கொள்ளக் கூடிய சவால்களை சமாளிக்க கூடிய வகையிலே ஜனாதிபதிக்கு கைகொடுத்து உதவுகின்ற முக்கிய அமைச்சர்களில் ஒருவர் என்கின்ற பெருமை அமைச்சர் மஹிந்த அமரவீரவாகிய உங்களுக்கு உண்டு என்பதனை கூறிவைக்கின்றேன்.
அரசியல் அமைப்புச் சட்டத்திலே அதிகாரப் பரவலாக்கல் வருவதற்கு ஒரு வருடம் அல்லது ஒருவருடத்திற்கு பிற்பட்ட காலங்கள் எடுக்கலாம். ஆனால் இதனை நடைமுறைப் படுத்திகாட்டுவதற்கு மத்திய அமைச்சர்களுக்கு அதிகாரம் உண்டு அந்த வகையிலே மீன் பிடி தொடர்பான விடங்களை மாகாணங்களுக்கு வழங்கவதிலே நீங்கள் ஒத்துழைத்து பெருமனதோடு செயற்படுவீர்கள் என நான் எதிபார்க்கின்றேன்.
மாகாண அரசம், மத்திய அரசம், பரஸ்பரம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கடற்றொழில் நீரியல் வள அமைச்சினூடாக, வழிப்படுத்த வேண்டும். எமது மாவட்டத்தில் இவ்வாறான திட்டங்களை நான் வரவேற்கின்றேன் எமது இயற்கை வளங்களை குறைவடைய செய்யும் வகையில் எந்தவித திட்டங்களும் அமைந்து விடக் கூடாது எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment