கடல் வாழ் செட்டை மீன் குஞ்சுகள் இனப் பெருக்க நிலையத்திறாக்கான அடிக்கல் மட்டக்களப்பு கிரான்குளத்தில் ஞாயிற்றுக் கிழமை (07) நடப்பட்டு ஆரப்பித்து வைக்கப் பட்டுள்ளது.கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், ஐக்கிய நாடுகள் உணவு விவசாய தாபனத்தின் உதவி வதிவிடப் பிரதிநிதி கலாநிதி விஜயவர்த்தன, இத்திட்டத்தின், தொழிநுட்ப ஆலோசகர் யொசுப்பி பிறைன்ஜொணி, இலங்கை நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி மொஹொட்டி, இதன் இலங்கைக்கான பணிப்பாளர் நிமால் சந்திரரெத்தின, மட்டக்களப்பு, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாவட்ட நீரியல் உயிரியலாளர் எஸ்.ரவிக்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் அடிக்கல்லினையும் நட்டு வைத்தனர்.
142 மில்லியன் ரூபாய் செலவில் சுமார் 5 ஏக்கர் விஸ்திரணத்தில் அமைக்கப்படவுள்ள இவ் மீன் குஞ்சி இனப்பெருக்க நிலையத்திற்கான நிதியுதவியினை இரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.
இலங்கையில் சந்தை வாய்ப்புள்ள மீன் குஞ்சுகளே இதன் போது உற்பத்தி செய்யப்படுமெனவும், இத் திட்டத்திற்கான அனைத்து நிர்மான வேலைகள் யாவும் 2016 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையவுள்ளதாகவும் திட்டத்திற்கு பொறுப்பான மட்டக்களப்பு மாவட்ட நீரியல் உயிரியலாளர் தெரிவித்தார்.
\
0 Comments:
Post a Comment