5 Feb 2016

விசேட தேவை உடையவர்களும் இந் நாட்டு பிரஜைகள் அவர்களும் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள்

SHARE
விசேட தேவை உடையவர்களும் இந் நாட்டு பிரஜைகள் அவர்களும் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 68வது சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடி, கிழக்கிலங்கை வலதுகுறைந்தோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை (04) காத்தான்குடி சாஹிரா விசேட தேவைக்குரியவர்களின் பாடசாலையில் இலங்கையின் 68வது சுதந்திரதின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள்  விசேட தேவைகளுடைய பிள்ளைகளுக்கு இனிப்புக்கள் வழங்கி அவர்களுடன் சுதந்திரதின விழாவினை கொண்டாடினார்,

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விசேட தேவை உடையவர்களும் இந் நாட்டு பிரஜைகள் அவர்களும் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள். சாதாரண ஓர் மனிதனை மதிப்பது போல் இவர்களையும் மதித்து அவர்கள் எவ்வாறான விடயங்களை கொண்டாடுகின்றார்களோ அதேபோல் இவர்களும் கொண்டாடி மகிழ வேண்டும் அதன் அடிப்படையில் வரலாற்று சிறப்புக்குரிய இந்நாளில் இந்த விசேட தேவைக்குரிய பிள்ளைகள் மிகவும் சந்தோசமாக சுதந்திரதினத்தினை கொண்டடுகின்றனர், இதே போல் அனைத்து   விடயங்களிலும் இவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் இந்த சமூகத்தின் அங்கத்தவர்கள் அவர்களுக்குள்ளே பல திறமைகள் இருக்கின்றன அதனை இனங்கண்டு அதனை வளர்க்க வேண்டும் அவர்களும் சுதந்திரமாக வாழவேண்டும் என தனது சுதந்திரதின உரையில் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: