மட்டக்களப்புக்கு புதன்கிழமை விஜயம் செய்த கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் புனித மிக்கேல் கல்லூரிக்கு விஜயம் செய்து பாடசாலையின் தேவைகள், பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.
பாடசாலைக்கு வருகை தந்த அமைச்சர், அதிபர் வெஸ்லியோ வாசுடன் பாடசாலையின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார்.
இந்த விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான ஜீ;.சிறிநேசன், மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உள்ளிட்டோரும், திணைக்கள அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பாடசாலையின் வகுப்பறைகள், கட்டடங்களை சுற்றிப்பார்வையிட்டதுடன், அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் அதிபருடன் கலந்துரையாடினார்.
அதிபர் வெஸ்லியோ வாஸினால் ஏற்கனவே சிற்றூழியர்கள் பற்றாக்குறை, ஆரம்பப்பிரிவுக்கான மாடிக்கட்டடம், கட்டடங்களின் திருத்த வேலைகள் குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை குறித்து நடவடிக்கை எடுக்குமாறும், பாடசாலையிலுள்ள பழைமையான கட்டடங்களை விரைவாகத்திருத்தித்தர அமைச்சர் நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஆங்கில பாரம்பரியத்தில் கட்டப்பட்ட புனித மிக்கேல் கல்லூரி மிகவும் புகழ்பெற்ற கல்லூரியாகும். இதன் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தவுள்ளேன். அதிபரால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி அவற்றினை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment