(க.விஜி, இ.சுதா)
துறைநீலாவணைக் கிராம மக்களின் நன்மை கருதி களுவாஞ்சிகுடி பொலிஸார் ஏற்பாடு செய்த நடமாடும் சேவை சனிக்கிழமை (27) துறைநீலாவணை விபுலானந்தர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது மருத்துவ சேவைகள் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குதல் மிருக வைத்திய ஆலோசனைகள் கண்பரிசோதனை ஆயுர் வேத மருத்துவப் பரிசோதனைகள் பொலிஸ் முறைப்பாட்டுகள் போன்ற பல சேவைகளை மக்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் நந்லால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், கு.சுகுணன் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பல திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment