6 Feb 2016

மட்டு,வெல்லாவெளியில் வேப்பை மரத்திலிருந்து பால் வடியும் அற்புதம்(வீடியோ)

SHARE
தமது வீட்டு முற்றத்திலுள்ள வேப்பை மரத்தின் உச்சியிலிருந்து பால்போன்ற திரவம் வழிந்து கொண்டிருப்பதாக வீட்டு
உரிமையாளரான க.பரமானந்தம் தெரிவிக்கின்றார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிக் கிராமத்திலுள்ள வீடொன்றின் முற்றதிலுள்ள வேப்பை மரத்திலிருந்து கடந்த 29 ஆம் திகதியிலிருந்து பால்போன்ற திரவம் வழிந்து கொண்டிருக்கின்றது.

இதுவரைக்கும் 30 போத்தல் திரவம் எடுத்துள்ளதாகவும், இவற்றை மருந்தாக மக்கள் உட்கொண்டு வருவதாகவும், இது அம்பாள் தெய்வத்தின் மகிமையாக இருக்கலாம் எனவும் வீட்டு உரிமையாளரான க.பரமானந்தம் கூறுகின்றார்.


















SHARE

Author: verified_user

1 Comments:

Nemy said...

மூடநம்பிக்கைகளை_பரப்பாதீர்கள்_மக்களுக்கும்_இதை_விளக்கிச்சொல்லுங்கள்

"வேப்பமரத்தில் இப்படி பால் வடிவதற்கு எந்தவிதமான தெய்வீகக் காரணமும் இல்லை. இந்த மரத்தில் உள்ள மாப்பொருளை அதாவது மாவுச்சத்தை (starch) வேப்பமர இலைகள் ஒளித்தொகுப்பின் மூலம் குளுக்கோசாக மாற்றுகின்றன. வேப்ப மரப் பட்டையின் அடிப்பகுதியில் புளோயம் என்ற திசு இருக்கிறது. இந்தத் திசு வழியாக குளுக்கோசாக மாற்றப்பட்ட மாப்பொருள் வரும்போது, அது பாலாக இருக்கிறது. எல்லா வேப்பமரத்திலும் இப்படிப் பால் வருவதில்லை. இந்த மரத்தில் இந்தத் திசு பாதிக்கப்பட்ட காரணத்தால் இப்படிப் பாலாகக் கொட்டுகிறது. தேவையைவிட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும்போது, பட்டையின் அடிப்பகுதியில் உள்ள திசு பாதிக்கப்பட்டு, அதன் வழியாகப் பாலாகக் கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது, திசு அடைபட்டு, இனிப்புப் பால் வடிவதும் நின்று போகும்.