6 Feb 2016

மட்டு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான நடமாடும் சேவை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான நடமாடும் சேவையொன்று எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை கல்லடி இல.42 விபுலானந்த வீதியிலுள்ள முகாமையாளர் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவை நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையின் கீழ் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர், அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது. 
எனவே பிரதேச மக்கள் அனைவரும் இந்நடமாடும் சேவையில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். அத்துடன் தங்களது குடிநீர் பற்றிய பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பில் எழுத்து மூலமான வேண்டுகோளை இம் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ தபால் மூலமாகவோ அல்லது தொலைநகல் மூலமாகவோ கீழே குறிப்பிட்டுள்ள காரியாலயங்களில் கையளிக்குமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வகையில், தொலைநகல் (065 - 2050600), அல்லது மாவட்ட பொறியியலாளர் காரியாலயம் (மட்டக்களப்பு), பொறுப்பதிகாரி (மட்டக்களப்பு / இருதயபுரம்/ கல்லடி/ காத்தான்குடி/ஆரையம்பதி/ ஏறாவூர்/ செங்கலடி/ வவுணதீவு/ கல்லாறு/ களுவாஞ்சிக்குடி) ஆகிய காரியாலங்களிலேயே கையளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமது வேண்டுகோள்களை கையளிக்கும் போது காரியாலங்களில் உரிய பொறுப்பதிகாரிகளினால் அடையாளப் படிவம் (Token) ஒன்று வழங்கப்படும். பொதுமக்கள் நடமாடும் சேவை இடம்பெறும் வேளை அந்த அடையாளப் படிவத்துடன் வருகை தந்து தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: